

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகில இந்திய விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன், ராமமூர்த்தி, நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர் கள் கூறுகையில், புதிய வேளாண் சட்டங்கள் மூலம் இலவச மின்சாரத்தைப் பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கலுக்கும், விலை உயர்வுக்கும் இது வழிவகுக்கும். விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதில் இருந்து, மத்திய, மாநில அரசுகள் விலகிக் கொள்ளும். எனவே, புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், என்றனர்.
நாமக்கல்
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும் கோஷம் எழுப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி