பெண்ணுக்கு இலவச சீர்வரிசை பொருட்கள்

பெண்ணுக்கு இலவச சீர்வரிசை பொருட்கள்
Updated on
1 min read

திருநெல்வேலி வேணுவன ரோட்டரிகழகம், சிவப்பிரகாசர் நற்பணி மன்றம், நல்லதை பகிர்வது நம்கடமை கலை பண்பாட்டு மன்றம் ஆகியவை சார்பில், அன்னை காந்திமதி அம்பாள் அன்பு இல்லத்தில்வளர்ந்த பெண்ணுக்கு சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப் பட்டன.

சிவப்பிரகாசர் நற்பணி மன்றச்செயலாளர் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வேணுவனரோட்டரி முன்னாள் தலைவர் நடராஜன், சுத்தமல்லி அன்னை காந்திமதி அம்பாள் அன்பு இல்ல பொறுப்பாளர் துர்காதேவி, சிவப்பிரகாசர் நற்பணி மன்ற புரவலர் என்.டி.பாலாஜி, துணைச் செயலாளர் சு.முத்துசாமி, சமூக சேவகர் நிதிஷ் முருகன் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in