திறன் மேம்பாட்டு பயிற்சி பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திறன் மேம்பாட்டு பயிற்சி பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிக்கை: தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு 3 மாதம் முதல்6 மாதம் வரையிலான குறுகிய காலதிறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கட்டணம் இல்லாமல் அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வாய்க் கால் பாலம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள NCFT Educational (P) Ltd. பயிற்சி நிறுவனத்துக்கு தையல் இயந்திர ஆபரேட்டர் பயிற்சி அளிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சில நிறுவனங்களுக்கு பயிற்சி ஆணைகள் வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கு சென்று வருவதற்கான அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, பயிற்சியில் சேரவிரும்பும் ஆதிதிராவிட மற்றும்பழங்குடியின மாணவ, மாணவிகள்விண்ணப்பித்து பயன்பெறலாம். பயிற்சி முடித்தவுடன் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க ஆவண செய்யப்படும்.

மேலும் விவரங்களை தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகம், ஏ.ஆர்.லைன் ரோடு, இலந்தகுளம், பாளையங்கோட்டை என்ற முகவரியில் நேரில் அணுகியோ அல்லது 0462-2561012 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ தெரிந்துகொள்ள லாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in