

தாட்கோ மூலமாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவ, மாணவிகளுக்கு சங்கராபுரத்தில் தானியங்கி சேவை தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, இரண்டு, மூன்று சக்கர வாகன தொழில் நுட்ப பயிற்சி, டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பயிற்சி கட்டணமின்றி அளிக்கப்படுகிறது. இதே போல் வளவனூரில் தையல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
பயிற்சிக்கு சென்று வர பயணப்படி, போக்குவரத்து செலவு வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
சான்று பெற்றவர்கள் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கவும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கிடவும் ஆவண செய்யப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.