

நில சீர்திருத்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, தொழிற்சாலைகளுக்கான நில உச்சவரம்பை தமிழக அரசு உயர்த்தியுள்ளதற்கு கொமதேக வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தொழிற்சாலைகள் தங் களுடைய விரிவாக்கத்திற்கும், புது தொழில் களை ஆரம்பிப்பதற்கும் நிலம் கையகப்படுத்தி வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்நிலையில், நில சீர்திருத்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, தொழிற்சாலைகள் 60 ஏக்கர் நிலம் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலையை மாற்றி 120 ஏக்கர் வரை வைத்து கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. நீண்ட காலமாக தொழிற்சாலைகள் தரப்பிலும், தொழில் சார்ந்த பல அமைப்புகள் தரப்பிலும் வைக்கப்பட்ட இந்த கோரிக்கையை தமிழக அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டதன் மூலம் தொழிற் சாலைகள் தங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும். இதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. தமிழக அரசின் இத்தகைய செயல்பாட்டை கொமதேக வரவேற்கிறது, எனத் தெரிவித் துள்ளார்.