

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பெல் (பாரத மிகு மின் நிறுவனம்) நிறுவன பணியாளர்கள், நேற்று உண் ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமயம் பெல் நிறுவனத்தை தனி யூனிட்டாக மாற்ற வேண்டும். நிறுவனத்தின் பணியாளர்களுக்கு குடியிருப்பு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும். கரோனாவைக் காரணம் காட்டி பணியாளர்களிடம் இருந்து உணவுக்காக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
நிறுவனத்தினர், தொழிற் சங்கத்தினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பிபியுடிஎஸ், ஐஎன்டியுசி, சிஐடியு, எல்பிஎப் ஆகிய தொழிற் சங்கங்கள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
நிறுவனத்தின் எதிரே நடைபெற்ற போராட்டத்தில், தொழிற் சங்கங்களின் பொதுச் செயலாளர்கள் டி.பழனிசாமி, என்.குமரேசன், பி.பெருமாள், பி.இளைய ராஜா உள்ளிட்டோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர்.