லாரி டிரைவர் கொலையில் தந்தை உட்பட 3 பேரிடம் விசாரணை

லாரி டிரைவர் கொலையில் தந்தை உட்பட 3 பேரிடம் விசாரணை
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் கலீல் (42) என்பவர் நேற்று முன்தினம் பைக்கில் சென்றபோது 3 பேர் கொண்ட மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கலீல் மனைவி தில்ஷாத் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், கலீலின் தந்தை குண்டாரி நன்னேபா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பைரோஸ், நபி பாஷா ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சொத்து குறித்து உயில் எழுதிய வகையில் கலீலுக்கும், பைரோஸ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், அதனால் பைரோஸ் மற்றும் இருவர் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in