உயிரிழந்த வேளாண்மை துறை அமைச்சருக்கு ஆரணியில் அதிமுகவினர் அஞ்சலி

ஆரணியில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அஞ்சலி செலுத்தினார்.
ஆரணியில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அஞ்சலி செலுத்தினார்.
Updated on
1 min read

உடல் நலக்குறைவால் உயிரிழந்தவேளாண்மை துறை அமைச்ச ருக்கு ஆரணியில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டிருந்த வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று முன்தினம் இரவு காலமானார். இதையொட்டி அவருக்கு, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டப்பேரவை அலுவலகத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது உருவப் படத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது.

அப்போது, மாவட்ட ஆவின் துணைத் தலைவர் பாரி பாபு, நகரச் செயலாளர் அசோக் குமார், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சங்கர், சேகர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in