

புவனகிரி அருகே உள்ள பரங்கிப் பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழமணக்குடி ஊராட் சியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராசாங் கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட ஜெயலலிதா பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் சமயசங்கரி மோகன் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா ளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான பாண்டியன் கலந்து கொண்டு, இளைஞர்மற்றும் இளம் பெண்கள் பாசறை யில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தும் கீழமணக்குடி ஊராட்சியில் 2 வாக் சுச் சாவடிகளுக்கு நிர்வாகிகளை நியமித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.
குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி,மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வீராசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாஸ்கர், சுதாகர், பாவாடை, இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் கள் ராஜேஸ்வரி ரெங்கசாமி, மரகதம், இளைஞரணி செயலாளர் செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.