

இதுகுறித்து மதுரை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் ஜா.பிரீடா பத்மினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விவசாய மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம் இன்று (நவ.1) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரை மின் பகிர்மான வட்டம், கிழக்கு, திருமங்கலம், சமயநல்லூர், உசிலம்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு பகல் நேரங்களில், குரூப் 1 பகுதிகளுக்கு காலை 9 முதல் மாலை 3 வரையிலும், குரூப் 2 பகுதிகளுக்கு காலை 9.30 முதல் மாலை 3.30 வரையிலும் மும்முனை மின் விநியோகம் வழங்கப்படும். இரவு நேர மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.