செங்கல்பட்டு தனி மாவட்டமான நிலையில் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு தனி மாவட்டமான நிலையில்   மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அமைக்க கோரிக்கை
Updated on
1 min read

செங்கல்பட்டு தனி மாவட்டமான நிலையில் மாவட்ட தொழிலாளர் அலுவலகம் இல்லாததன் காரணமாக தொழிலாளர்கள் நல வாரியம் தொடர்பான செயல்பாடுகளுக்காக காஞ்சிபுரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏழை எளியதொழிலாளர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆகவே, விரைவில் மாவட்ட தொழிலாளர் அலுவலகம் அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். இணையவழி நலவாரிய பதிவு நடைமுறையில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால் பல தொழிலாளர்கள் பதிவுசெய்வது கடினமாக உள்ளது.

ஆகவே பழைய நடைமுறையை கொண்டு வர வேண்டும் மேலும் அரசு நடத்தக் கூடியநேரடி நலவாரிய முகாம்களை நடத்த வேண்டும். எனவே தொழிலாளர்கள் நலன் கருதி செங்கல்பட்டு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை உடனடியாக செங்கல்பட்டில் அமைக்கஉரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in