

எனவே கும்பாபிஷேக திருப்பணிகளை நேரடியாக கண்காணிக்க காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடத்துக்கு அதிகாரியை நியமிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பக்தர்கள் சிலர் கூறும்போது, "ஆளவந்தார் அறக்கட்டளையின் நிலங்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்திலும் நடைபெற்று வருவதால், செயல் அலுவலர் வழக்கு தொடர்பான பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது. இதனால், கூடுதலாக கோயில் பணிகளை கவனிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், நீண்ட ஆண்டுகளுக்கு பின் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் திருப்பணிகள் நடைபெற உள்ளதால், பணிகளை கண்காணித்து முறையாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே, காலியாக உள்ள செயல் அலுவலர் பணிக்கு அதிகாரியை நியமிக்க வேண்டும்" என்றனர்.