மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு - பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு :

வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை தங்கப் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள்- ரங்கமன்னார்.
வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை தங்கப் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள்- ரங்கமன்னார்.
Updated on
1 min read

மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஆண்டாளுக்கு திருப்பாவை பாடல்கள் பொறித்த தங்க இழை கொண்டு நெய்யப்பட்ட பட்டுப்புடவை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

இதேபோல் மதுரை கூடலழகர் பெருமாள் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசஜலபதி கோயில், அழகர்கோவில் சுந்தர ராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்கள் நேற்று அதிகாலை திறக்கப்பட்டன. பெருமாள், தேவி, பூதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in