சட்டவிரோத காவலில் இறந்த - இளைஞர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு : உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சட்டவிரோத காவலில் இறந்த  -  இளைஞர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு :  உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
Updated on
1 min read

போலீஸ் விசாரணைக்கு அழைத் துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.5லட்சம் இழப்பீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட் டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

மதுரை கோச்சடையைச் சேர்ந்த எம்.ஜெயா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

என் மகன் முத்து கார்த்திக்கை (17), மதுரை எஸ்.எஸ். காலனி காவல் ஆய்வாளர் அலெக்ஸ், சார்பு ஆய்வாளர் சதீஷ், காவலர் ரதி ஆகியோர் ஒரு வழக்கின் விசாரணைக்காக காவல் நிலை யத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் 13.1.2019 முதல் 16.1.2019 வரை சட்ட விரோதமாக அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளனர். பின்னர், எனது மகனை பொய் வழக்கில் கைது செய்தனர்.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட முத்து கார்த்திக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

என் மகன் மரணம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற உத்தர வின்படி சிபிசிஐடி போலீஸார் விசாரித்து காவல் ஆய்வாளர் அலெக்ஸ் உட்பட 3 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இருப்பினும் அந்த 3 பேர் மீது இதுவரை துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, என் மகன் கொலை வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் அலெக்ஸ் உட்பட 3 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும், ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.

இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள் ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரரின் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிடுகையில், மனுதாரர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in