

வில்லுக்குறியில் தமிழக அரசின்சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்றது.
கிராமப்புற மக்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டங்கள், கரோனா தொற்று காலத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்ட நிவாரண உதவி, பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்றவை குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. அரசின்நலத்திட்டங்கள் குறித்த விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றை வில்லுக்குறி பகுதி பொதுமக்கள் திரளானோர் பார்வையிட்டனர்.