

காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) இயந்திரவியல் துறை சார்பில் ‘‘எதிர்கால தொழில்நுட்பங்கள்”என்ற தலைப்பிலான 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் நேற்று தொடங்கியது.
என்ஐடி இயக்குநர் முனைவர் கே.சங்கரநாராயணசாமி கருத்தரங்கை தொடங்கிவைத்தார். என்ஐடி பதிவாளர்(பொ) முனைவர் ஜி.அகிலா வாழ்த்திப் பேசினார். அமெரிக்காவின் ஓல்டு டொமினியன் பல்கலைக்கழக இயந்திரவியல் மற்றும் விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் பிரபாகரன் ராமமூர்த்தி, சிறப்பு அழைப்பாளராக இணைய வழியில் பங்கேற்றார்.
இக்கருத்தரங்கில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 7 புகழ்பெற்ற பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் பேசுகின்றனர். 200- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 126 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் என்.எம்.சிவராம் தலைமையில் என்ஐடி இயந்திரவியல் துறையினர் செய்துள் ளனர்.