Published : 17 Dec 2021 03:09 AM
Last Updated : 17 Dec 2021 03:09 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (46). இவர், தூத்துக்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வாலசமுத்திரம் அருகே வந்த போது பின்னால் வந்த கார் மோதியுள்ளது. இதில் காயமடைந்த பாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது பாலகிருஷ்ணனின் உறவினர்கள் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பணியில் இருந்த மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிட உதவி மருத்துவ அலுவலர் இன்சுவை, தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் மற்றும் போலீஸார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இதனால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT