

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்- 2022 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் மற்றும்தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் எஸ்.ஜெயந்தி பேசும்போது,‘‘அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் ஆட்சேபனைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்திசெய்வதற்காக இக்கூட்டம்நடத்தப்படுகிறது. வாக்காளர்இறுதி பட்டியல் வெளியிடும்போது செம்மையாக வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றார். ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித், மாவட்ட வருவாய்அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும்அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.