விழுப்புரத்தில் பேருந்தில் பயணி உயிரிழப்பு :

விழுப்புரத்தில் பேருந்தில்  பயணி உயிரிழப்பு :
Updated on
1 min read

விழுப்புரம் பேருந்து நிலையத் திலிருந்து நேற்று பிற்பகல் 1 மணி அளவில் அரசுப் பேருந்து சென்னைக்கு புறப்பட்டது.

பேருந்து விழுப்புரம் நீதி மன்றம் எதிரே சென்றபோது பெண் பயணி ஒருவர் திடீரென மயங்கியதால் பேருந்து நிறுத்தப்பட்டது.

இத்தகவல் அறிந்து அவசரஊர்தி அங்கு விரைந்து வந்து,மயக்கம் அடைந்த பயணியைபரிசோதித்தனர்.

மாரடைப்பு ஏற்பட்டு அவர்ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்தபெண், சென்னை, சைதாப்பேட் டையைச் சேர்ந்த உமா (65) என்பதும், விழுப்புரத்துக்கு கோயிலுக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும்போது உயிரிழந்தது தெரியவந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in