Published : 16 Dec 2021 03:07 AM
Last Updated : 16 Dec 2021 03:07 AM

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் - சூரிய மின் உற்பத்தி மூலம் ஆண்டுக்கு ரூ.1 கோடி சேமிப்பு :

புதுவை மத்திய பல்கலைக்கழகம் தனது சூரிய மின் உற்பத்தி நிலை யங்கள் மூலம் ஆண்டுக்கு 1 கோடிரூபாய்க்கு மேல் மின் கட்டணத்தைச் சேமிப்பதாக துணைவேந்தர் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக வைக்கப்பட்டு நிலுவை யில் உள்ள அனைத்துப் பதவி உயர்வுகளையும் வழங்கி, 186 ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் பணியிடங்கள் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டன. மேலும், 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்; நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கருணைப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. தற்போது 25 சர்வதேச மற்றும் 27 தேசிய புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் செயலில் உள்ளன.

பல்கலைக்கழகச் சமூகப் பொறுப்புத் (USR) திட்டத்தை பல்கலைக்கழகத்தின் அனைத்து இணைவு பெற்ற கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தியது. இதன் விளைவாக, 103 கிராமங்கள், கிராமத் தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்டன.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.13 கோடி செலவில் வளாகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள, 2.4 மெகாவாட் திறன் கொண்டமின் சோலார் பேனல், பல்கலைக்கழகத்தின் மின்தேவை யைப் பூர்த்தி செய்கிறது. இதன்மூலம் புதுவை பல்கலைக் கழக மின்கட்டணம் செலுத்துவதில் இருந்து வருடத்திற்கு ரூ. 1.கோடி மிச்சப்படுத்தியுள்ளது. மேலும் உபரி மின்சாரத்தையும் புதுவை மின்துறைக்கு வழங்கி வருகிறது

பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம், காரைக்கால் மற்றும் அந்தமான் வளாகங்களில் கல்வித் துறைகளுக்கான கட்டிடங் கள், விரிவுரை மண்டப வளாகம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விடுதிகள், ஆராய்ச்சி அறி ஞர்கள், பணியாளர்கள் குடியி ருப்புகள் ஆகியவற்றைப் புதி தாகக் கட்டமைப்பதற்கான நிதியாக, ரூ.206.94 கோடியை அனுமதித்துள்ளது என்று குறிப் பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x