

மதுரை
மதுரை கோ.புதூர் வடக்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் ஜீ.மலர்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பாலை துணை மின் நிலையத்தில் இன்று (டிச.16) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால் திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர் பங்களா, வள்ளுவர் காலனி, விஸ்வநாதபுரம், குலமங்கலம், கண்ணனேந்தல், சூர்யா நகர், ஊமச்சிகுளம், அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை, வலையபட்டி, கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும்.
மகாத்மா காந்தி நகர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுவதால் விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், ராம்நகர், கார்த்திக் நகர், இந்திரா நகர், எஸ்விபி நகர், முடக்கத்தான் ஆபீசர்ஸ் டவுன், கலை நகர், மூவேந்தர் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
கம்பம்
கம்பம் துணை மின்நிலையத்தில் இன்று (வியாழன்) பராம ரிப்புப் பணி நடைபெறுகிறது. இதனால் காலை 10 முதல் மாலை 4 வரை கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சுற்றுப்புற கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என சின்ன மனூர் செயற்பொறியாளர் பெ.ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.