

தஞ்சாவூர் அருகே உள்ள மேலவஸ்தாசாவடியில் தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலர் எஸ்.சமத்துவராஜ், குடிமைப் பொருள் வழங்கல் பறக்கும் படை தனி வருவாய் ஆய்வாளர் ப.கபிலன் ஆகியோர் நேற்று முன்தினம் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, புதுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி வேனில் சோதனையிட்டனர். அதில், 50 மூட்டைகளில் 2,500 கிலோ பொது விநியோகத் திட்ட புழுங்கல் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரான தினேஷை உணவுப் பொருள் குற்றப் புலனாய்வு போலீஸாரிடம் அலுவலர்கள் ஒப்படைத்தனர். போலீஸார், தினேஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.