Published : 16 Dec 2021 03:08 AM
Last Updated : 16 Dec 2021 03:08 AM

கற்குவேல் அய்யனார் கோயிலில் இன்று கள்ளர் வெட்டு திருவிழா : பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை

உடன்குடி அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டுத் திருவிழா இன்று (டிச.16) நடைபெறுகிறது. பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருவிழா நவம்பர் 17-ம் தேதி காலையாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார சுவாமிகளுக்குசிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றுவருகின்றன. முக்கிய நிகழ்வான கள்ளர்வெட்டு நிகழ்ச்சி இன்று (டிச.16) மாலைகோயிலுக்கு பின்புறம் உள்ள தேரிக்காட்டில் நடைபெறுகிறது. 17-ம் தேதி விழாநிறைவுபெறுகிறது. இவ்விழாவில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `இவ்விழாவின் முக்கிய நாட்களான 16 மற்றும் 17-ம்தேதிகளில் கற்குவேல் அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு அனுமதி இல்லை’ என தெரிவித்துள்ளார்.

கள்ளர்வெட்டு நிகழ்ச்சி இன்று (டிச.16) மாலை கோயிலுக்கு பின்புறம் உள்ள தேரிக்காட்டில் நடைபெறுகிறது. 17-ம் தேதி விழா நிறைவுபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x