லாரி ஓட்டுநர் விபத்தில் மரணம் :

லாரி ஓட்டுநர் விபத்தில் மரணம்  :
Updated on
1 min read

தூத்துக்குடி அருகே உள்ள ஒட்டநத்தம் வடக்கு தெருவைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் மகன் சூரியநாராயணன்(23). இவர் தூத்துக்குடி- மதுரை புறவழிச்சாலையில் உள்ள நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் லாரி டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது லாரிக்கு கீழே வைக்கப்பட்டிருந்த ஜாக்கி விலகியதால், லாரி சூரியநாராயணன் மீது விழுந்து நசுக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த சூரியநாராயணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தூத்துக்குடி சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in