

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி, சென்னை பிரிம்மாடெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது. கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாஸ முருகவேல் தலைமை வகித்தனர். சென்னை பிரிம்மா டெக் மென்பொருள் நிறுவனரும் கல்லூரிமுன்னாள் மாணவருமான பி.சுப்ரமணியன் தலைமைவிருந்தினராக கலந்துகொண்டுஒப்பந்தத்தில் கையொப்ப மிட்டார். பிரிம்மா டெக் நிர்வாகபங்குதாரர் மரியோ டிபெனெடெட்டோ, கந்த சுப்புராஜ் ஆகியோர் தங்களது குழுவினருடன் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் பேராசிரியர் வி.கலைவாணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தகவல் மற்றும் தொழில்நுட்பம் துறையின் பேராசிரியர் பி.பரமசிவன் தலைமையில் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.