Published : 16 Dec 2021 03:08 AM
Last Updated : 16 Dec 2021 03:08 AM

எம்-சாண்ட் கடத்தியவர் கைது :

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே கரிசல்குளம் - கொடுக்காம்பாறை சாலையில், மாவட்ட கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் முத்து கண்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில், எந்தவித அனுமதியுமின்றி எம்-சாண்ட் மணல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. லாரி ஓட்டுநர் கோவில்பட்டி சீனிவாச நகரைச் சேர்ந்த முத்து (46) என்பவரை போலீஸார் கைது செய்தனர். 3 யூனிட் எம்-சாண்ட் மணலுடன் டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x