வேலூரில் உள்ள பிரபல நகை கடையில் திருட்டு - பெங்களூரு கொள்ளையனுக்கு தொடர்பு? :

வேலூரில் உள்ள பிரபல நகை கடையில் திருட்டு -  பெங்களூரு கொள்ளையனுக்கு தொடர்பு? :
Updated on
1 min read

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள பிரபல நகைக் கடையில் நடந்த திருட்டு வழக்கில் பெங்களூரு கொள்ளையனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘வேலூரில் உள்ள பிரபல நகைக்கடையில் தங்கம், வைர நகைகள் இருப்பு மொத்தம் 90 கிலோ. இதில், 70 கிலோ அளவுக்கு லாக்கரில் வைத்து நேற்று முன்தினம் இரவு பூட்டியுள்ளனர். மீதமிருந்த 20 கிலோ தங்க நகைகள் ஷோகேஸ்களில் அப்படியே விட்டுள்ளனர். நள்ளிரவில் கடையின் பின்புறம் உள்ள ஏ.சி துளையின் வழியாக உள்ளே புகுந்த ஒரு மர்ம நபர், தரைத்தள ஷோகேஸ் பகுதிக்கும் பக்கவாட்டு சுவருக்கும் இடையில் இருந்த 1 அடி அகலம் இடைவெளியில் நுழைந்துள்ளார்.

அங்கிருந்து தரைத்தளத்தின் பால் சீலிங் பகுதிக்குச் சென்றவர், அந்த பால் சீலிங்கை உடைத்து உள்ளே குதித்துள்ளார். பின்னர், ஷோகேஸ்களில் இருந்த விலை உயர்ந்த தங்கம் மற்றும் வைர நகைகளை மட்டும் கொள்ளையடித்து தப்பியுள்ளார். லாக்கரை உடைக்காததால் அதலிருந்த 70 கிலோ தங்கம், வைர நகைகள் தப்பியுள்ளன.

பயணிகள் பட்டியல் சேகரிப்பு

மேலும், திருட்டு சம்பவம் நடைபெற்ற நள்ளிரவு 1 மணியில் இருந்து 2 மணிக்குள் எத்தனை வாகனங்கள் தோட்டப்பாளையம் சாலையில் கடந்துள்ளது என்ற விவரங்களையும் சேகரித் துள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in