Published : 15 Dec 2021 03:07 AM
Last Updated : 15 Dec 2021 03:07 AM
ரயில் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவால் மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான ரயில் சேவை வரும் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கல்லாறு - குன்னூர் இடையேயான வழித்தடத்தில் மண் சரிந்துள்ளது. மரங்களும் விழுந்துள்ளன.
இவற்றை சரிசெய்யும் பணி நடப்பதால் மேட்டுப்பாளையம்-உதகை சிறப்பு ரயில் சேவை டிசம்பர் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. குன்னூர்-உதகை இடையேயான ரயில் வழக்கம்போல இயங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT