Published : 15 Dec 2021 03:07 AM
Last Updated : 15 Dec 2021 03:07 AM

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி :

கோவையில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன். படம்: ஜெ.மனோகரன்

கோவை: திருத்தணியில் நேற்று நடைபெற்ற விழாவில், 1,730 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.105 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்கள், நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், முதல்வர் காணொலி மூலம் பங்கேற்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பங்கேற்று, ரூ.1,068 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 12,816 உறுப்பினர்களுக்கு ரூ.41.31 கோடி மதிப்பிலான கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x