Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM
புதுச்சேரியில் தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமின்றி பல்வேறு மொழி படப்பிடிப்புகளும் நடந்து வருகின்றன. ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடத்த, புதுச்சேரி நகராட்சி சார்பில் முன்பு ரூ.5 ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த வரிக் கட்டணம் ரூ.28 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
பிற மாநிலங்களைக் காட்டிலும் இந்த வரிவிதிப்பு குறைவு என்றாலும், உயர்த்திய வரி விதிப்பை குறைக்க வேண்டும் என திரைப்படத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்த நடிகர்கள் தியாகராஜன், பார்த்திபன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர், முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து, வரியை குறைக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்கு நரும், நடிகருமான கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் '369' என்ற திரைப்படம், புதுச்சேரியில் படமாக்கப்பட உள்ளது.தொடர்ச்சியாக 90 நிமிடங் களில் இப்படத்தை எடுத்து முடிக்க உள்ளனர்.
புதுச்சேரியில் இன்று நடைபெற உள்ள இந்தப் படபிடிப்புக்கு வந்துள்ள அவர், முதல்வர் ரங்கசாமியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, படப்பிடிப்புக்கு புதுச்சேரி அரசுவிதிக்கும் வரியை குறைக்க வேண்டுமென இயக் குநர் பாக்யராஜ் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாக்யராஜ், ‘‘புதுச்சேரியில் படப்பிடிப்பு வரியைஉயர்த்தியுள்ளனர். உயர்த்தப்பட்டுள்ள இந்த வரியை குறைக்க வேண்டும் என முதல்வர் ரங்க சாமியிடம் வலியுறுத்தினேன். பரிசீலனை செய்து குறைக்க நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT