உதவித்தொகையை உயர்த்த கோரி - மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் மறியல் :

பழநியில் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.
பழநியில் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மாநகர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடந்த போராட் டத்துக்கு மாவட்டத் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார்.

இதில், செயலாளர் பி.வீரமணி, பொருளாளர் மாரியப்பன், நிர்வாகிகள் தங்கவேல், பழனியம்மாள், மனோகரன் மற்றும் சிஐடியு செயலாளர் ரா.தெய்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ராமேசுவரம்

ராமநாதபுரம்

அதேபோல, கடலாடி தாலுகா சங்கம் சார்பில் சிக்கலில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். தாலுகா தலைவர் போஸ், செய லாளர் முகம்மது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், கடலாடி வட்டாட்சியர் சேகர் நேரில் வந்து கோரிக்கை மனுவை பெற்றார்.

திண்டுக்கல்

செம்பட்டியில் நடந்த மறியலுக்கு ஆத்தூர் ஒன்றியச்செயலாளர் ஆறுமுகவள்ளி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செல்வநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பழநி பேருந்துநிலையம் அருகே நடந்த போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் பகத்சிங் தலைமை வகித்தார். பல இடங் களிலும் மறியல் செய்த 600 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகங்கையில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த 90 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in