Published : 15 Dec 2021 03:09 AM
Last Updated : 15 Dec 2021 03:09 AM

சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் தூத்துக்குடியில் ஆய்வு :

தூத்துக்குடியில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் 2021- 2022-ம் ஆண்டுக்கான தமிழ்நாடுசட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தகுழுவில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியகட்சிகளை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

எஸ்.ஆர்.ராஜா மற்றும் குழு உறுப்பினர்கள் ச.அரவிந்த் ரமேஷ்,காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், ஆ.தமிழரசி, கோ.தளபதி,வி.பி.நாகை மாலி, ரூபி மனோகரன் ஆகியோர் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வரவேற்றார்.

தூத்துக்குடி அனல்மின் நிலையம், துறைமுகத்தில் உள்ளபூம்புகார் கப்பல் நிறுவனம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், எரிசக்தி கழகம், பூம்புகார் கப்பல் கழகம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்குகள் கழகம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ செ.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாநகராட்சி ஆணையர் சாரு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x