Published : 15 Dec 2021 03:10 AM
Last Updated : 15 Dec 2021 03:10 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் - 2 நாட்களுக்கு பட்டா பிழைத்திருத்தும் சிறப்பு முகாம் : ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் இன்று மற்றும் வரும் 17-ம் தேதிகளில் பட்டா பிழைத் திருத்த சிறப்பு முகாம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங் களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு மனை பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவிலான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

அதில் கணினி பதிவேற்றத்தில் ஏற்பட்டுள்ள சிறிய பிழைகள், கணினியில் பட்டா வரப்பெறாமல் உள்ள இனங்கள், பட்டாதாரரின் பெயர் கணினி பதிவேற்றத்தில் மாறியுள்ள இனங்களுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படும். இதைத்தொடர்ந்து திருப்பத்துார் மாவட்டத்தில், ஒவ்வொரு வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இன்று மற்றும் 17-ம் தேதி என 2 நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருப்பத்துார் வட்டத்தில், தாமலேரிமுத்துார், கட்டேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு 15-ம் தேதி (இன்று) தாமலேரிமுத்துார் வி.பி.ஆர்.சி. கட்டிடத்திலும், வரும் 17-ம் தேதி ஜோலார்பேட்டை, ஏலகிரி கிராமம் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஜோலார்பேட்டை வருவாய் ஆய்வாளர் குடியிருப்பிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாட்றாம்பள்ளி வட்டத்தில் 15-ம் தேதி (இன்று) நாயனசெருவு, கத்தாரி, தோப்பலகுண்டா ஆகிய கிராமங்களுக்கு நாயனசெருவு கிராம நிர்வாக அலுவலகத்திலும், வரும் 17-ம் தேதி மல்லப்பள்ளி கிராமத்துக்கு மல்லப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வாணியம்பாடி வட்டத்தில் 15-ம் தேதி இளையநகரம் கிராமத்துக்கு இளையநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், சின்ன வேப்பம்பட்டு கிராமத்துக்கு கிராம நிர்வாக அலுவலகத்திலும், வரும் 17-ம் தேதி தும்பேரி கிராமத்துக்கு தும்பேரி அரசு உயர்நிலைப்பள்ளி யிலும் சிறப்பு முகாம் நடைபெறு கிறது.

ஆம்பூர் வட்டத்தில் 15-ம் தேதி சின்னவரிகம், பெரியவரிகம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சின்னவரிகம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், கைலாசகிரி கிராமத்துக்கு கிராம நிர்வாக அலுவலகத்திலும், வரும் 17-ம் தேதி மலையாம்பட்டு, தென்னம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு மலையாம்பட்டு கிராம ஊராட்சி சேவை மையத்திலும், பெரியாங்குப்பம், ஆலாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பெரியாங்குப்பம் கிராம நிர்வாக அலுவலகத் திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்’’ என தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x