நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி  -  பரமக்குடியில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் :

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி - பரமக்குடியில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் :

Published on

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, எமனேசுவரம் அனைத்து கைத்தறி நெசவாளர் சொசைட்டி உறுப்பினர்களின் பெடரேஷன் சார்பாக பரமக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டுநூல், காட்டன் மற்றும் ஜரிகை உள்ளிட்ட கச்சா பொருட் களின் விலை கடந்த 6 மாதங்களில் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், கைத்தறி பட்டு ஜவுளிக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி அமல்படுத்தக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் டிச. 11 முதல் டிச. 13 வரை நெசவாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் சேஷய்யன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோவிந்தன், செயலாளர் கோதண்டராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in