

கோவில்பட்டி வேலாயுதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உட்பட்ட வடக்கு புதுக்கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடை எண்:2-ல்குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து, ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, தாலுகா விநியோக அதிகாரி நாகராஜ்ஆகியோர் நியாயவிலைக் கடையில் திடீர்ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடையில் 50 கிலோ எடை கொண்ட 365 மூட்டைகளில் உள்ள அரிசி தரமற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது. குடும்பஅட்டைதாரர்களுக்கு அந்த அரிசியை விநியோகிக்க வேண்டாம். இதற்கு பதிலாக மாற்றுஅரிசி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என விற்பனையாளரிடம் தெரிவித்தனர்.