அச்சமங்கலம் கிராமத்தில் - ரூ.7.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி :

அச்சமங்கலம் கிராமத்தில் -  ரூ.7.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி :
Updated on
1 min read

பர்கூர் ஊராட்சி ஒன்றியம் அச்சமங்கலம் கிராமத்தில் ஏராளமான கிரானைட் தொழிற் சாலைகள் உள்ளன. இங்குள்ள தொழிற்சாலைகள், வீடுகள் மற்றும் விவசாயத்துக்கு தேவையான அளவு மின் விநியோகம் கிடைக்காத நிலை இருந்தது. இதையடுத்து, இங்கு கூடுதலாக மின்மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை அறிந்த பர்கூர் எம்எல்ஏ மதியழகன், புதிய மின்மாற்றி அமைக்க மின்வாரியத்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, அச்சமங்கலம் கிராமத்தில் புதிதாக ரூ.7.50 லட்சம் மதிப்பில் மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் செயல்பாடு தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலாசகாயமேரி தலைமை வகித்தார். போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) முத்துசாமி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் மதியழகன், மின்மாற்றியின் பயன்பாட்டை தொடங்கிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in