வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் : ஆக்கிரமிக்கப்பட்ட : சாலையை மீட்கக்கோரி மனு :

வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் : ஆக்கிரமிக்கப்பட்ட : சாலையை மீட்கக்கோரி மனு :
Updated on
1 min read

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், தனிநபர் ஆக்கிரமித்துள்ள 10 அடி சாலையை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஆவடி வீட்டுவசதி பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில், மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில், ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு செக்டார் 1-ல் உள்ள நூலகம் எதிரே சிறிய பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவைச் சுற்றி கடந்த செப்டம்பர் மாதம் சிமென்ட் தரை போடப்பட்டது.

இந்நிலையில், பூங்கா ஒட்டியுள்ள 44-வது தெருவில் வசிக்கும் நபர் ஒருவர் பூங்காவை ஒட்டியுள்ள 10 அடி சாலையை ஆக்கிரமித்துள்ளார்.

அந்த இடத்தில் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்தும், துணிகள் உலர்த்துவதற்காக கம்பிகள் கட்டியும் பயன்படுத்தி வருகிறார். மேலும், மக்கள் நடமாட முடியாதபடி மரக்கிளைகளை வெட்டி குறுக்கே போட்டுள்ளார். எனவே, தனிநபர் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த இடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in