சிதம்பரம் கோயிலில் உழவாரப்பணி :

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப்பணியை மேற்கொள்ள குவிந்துள்ள சிவனடியார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப்பணியை மேற்கொள்ள குவிந்துள்ள சிவனடியார்கள்.
Updated on
1 min read

சிதம்பரம் நடராஜர் கோயிலில்சிவனடியார்கள் உழவாரப்பணி யில் ஈடுபட்டனர்.

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் உற்சவ கொடியேற்று விழா நேற்று முன்தினம் நடந்தது. வரும் 20-ம் தேதிய ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. இந்த நிலையில் தரிசன விழாவை முன்னிட்டு நேற்று சிவனடியார்கள் நடராஜர் கோயிலில் உள்ள ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரம் கால் மண்டபம்,கோயில் சுற்று பிரகாரம், கோயில் மண்டபம், கோயிலின் உட்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உழ வாரப்பணியை மேற்கொண்டனர். பாஸ்கர் தீட்சிதர், திருச்சி தமிழ்மணி, சதாசிவம், சிவனடியார்கள், சிவபக்தர்கள், தீட்சிதர்கள், சிவதொண்டர்கள், ஆன்மிகவாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோயிலை சுத்தப்படுத்தி உழவாரப் பணியில் ஈடு பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in