Published : 13 Dec 2021 03:09 AM
Last Updated : 13 Dec 2021 03:09 AM

ஆண் சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் தகவல் :

திருப்பத்தூர்: இடைநிலை பணியாளர் மற்றும் ஆண் சுகாதார ஆய்வாளர் (நிலை-2) ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘திருப்பத்துார் மாவட்டம் பொது சுகாதாரத்துறை, மாவட்ட நல சங்கம் மூலம், இடைநிலை பணியாளர் மற்றும் ஆண் சுகாதார ஆய்வாளர் (நிலை-2) ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இடைநிலை சுகாதாரப்பணிக்கு 50 வயதுக்குட்பட்ட பெண்கள், செவிலியர் பட்டப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம், தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண் சுகாதார ஆய்வாளர் (நிலை-2) பணிக்கு, 50 வயதுக்குட்பட்ட ஆண்கள் 12-ம் வகுப்பில் (உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் பயிற்சி அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், காந்தி கிராமம் கிராமிய நிறுவனம், நிகர் நிலை பல்கலைக்கழகங் களில், இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், திருப்பத்துார் மாவட்டத்தில் காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிக் கும் விவரங்கள் (https://tirupathur.nic.in) என்ற வலைதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன், மாவட்ட துணை இயக்குநர், சுகாதார பணிகள், திருப்பத்தூர் மாவட்ட அலுவலகத்தில் வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களை தேசிய நலவாழ்வு குழுமம் (http://nhm.tn.gov.in/en/node/6228) என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த நியமனங்கள் தற்காலிக அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x