சிவகங்கையில் 8 ஆண்டுகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி - மத்திய நறுமண பூங்காவுக்கு நகர் ஊரமைப்பு துறை அனுமதி :

சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நறுமணப் பூங்கா.
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நறுமணப் பூங்கா.
Updated on
1 min read

சிவகங்கை மத்திய நறுமணப் பூங்காவுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு நகர் ஊரமைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது.

மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம் சார்பில் சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் 73 ஏக்கரில் மிளகாய், மஞ்சள், வாசனைப் பொருட்களுக்கான நறுமணப் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் 23 ஏக்கரில் ரூ.28 கோடியில் பல ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள், தட்பவெப்ப நிலைக் கட்டுப்பாட்டு அறை, சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டன.

மீதியுள்ள இடத்தில் கிடங்குகளுடன் ஏற்றுமதி நிறு வனங்கள் அமைக்க தலா ஒரு ஏக்கர் வீதம் 30 மனையிடங்கள் உருவாக்கப்பட்டன.இந்தப் பூங்கா மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ரூ.1,500 கோடிக்கு வர்த்தகம் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நகர் ஊரமைப்புத் துறையிடம் அனுமதி பெறா மலேயே இந்தப் பூங்காவை 2013-ம் ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். அதன் பின் நீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த ஆண்டு மனையிடங்களுக்கு நகர் ஊரமைப்பு இயக்குநரகம் அனுமதி வழங்கியது. ஆனால், கட்டிடங்களுக்கு அனுமதி தர வில்லை. நறுமணப் பூங்கா அதிகாரிகள் பலமுறை முயற்சி செய்தும் அனுமதி கிடைக்க வில்லை. இது தொடர்பாக அண்மையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, ஸ்பைசஸ் போர்டு செயலர் டி.சத்யன் ஆகியோரின் தொடர் நடவடிக்கையால் நறுமணப் பூங்கா கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்புத் துறையின் சிவகங்கை கூட்டு உள் ளூர் திட்டக் குழுமம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து நறுமணப் பூங்கா விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in