மக்கள் நீதிமன்ற முகாம்களில் - ரூ.18.42 கோடிக்கு இழப்பீடு ஆணை :

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், தீர்வு காணப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகைக்கான ஆணையினை வழங்கிய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்த லீலா. படம்: வி.எம்.மணிநாதன்.

Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாம்களில் ரூ.18 கோடியே 42 லட்சத்து 83 ஆயிரத்து 441-க்கு இழப்பீடு வழங்குவதற்கான ஆணை கள் வழங்கப்பட்டன.

வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் முகாமுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி வசந்த லீலா தலைமை தாங்கினார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி அருணாசலம், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி மணிவண்ணன், தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி பானுரேகா, சார்பு நீதிபதி ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராணிப்பேட்டையில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி ரேவதி, மாவட்ட குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி தெய்வீகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 291 வழக்குகளில் ரூ.2 கோடியே 83 லட்சத்த 83 ஆயிரத்து 246-க்கு இழப்பீட்டுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 11,483 வழக்குகளில் 2,887-க்கு தீர்வு காணப்பட்டு ரூ.18 கோடியே 42 லட்சத்து 83 ஆயிரத்து 441-க்கு இழப்பீட்டுக்கான ஆணைகள் வழங் கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in