ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தரிசனம் :

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் சூழ்ந்திருந்த தண்ணீர் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டதை தொடர்ந்து, 11 நாட்களுக்கு பிறகு கோயிலின் உள்ளே சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள்  நேற்று அனுமதிக்கப்பட்டனர்.படம்: வி.எம்.மணிநாதன்.

Updated on
1 min read

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோயிலில் 11 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பால் கன மழை பதிவானதால் வேலூர் கோட்டை அகழியில் சுமார் 30 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் தேங்கியது. இதன் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கோயிலில் தேங்கிய தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக 11 நாட்களுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in