

செஞ்சி அருகே அருகாவூரைச் சேர்ந்தவர் சடகோபன்(55). திண்டிவனம் அருகே காட்டு சிவிரி அண்ணா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (52). விவசாயிகளான இருவரும் உறவினர்கள். நேற்று அதிகாலை இருவரும்மொபட்டில் செஞ்சியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். தீவனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது,பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று, இருவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருவரும் உயிரிழந் தனர். டேங்கர் லாரி ஓட்டுநரான திருவண்ணாமலையைசேர்ந்த நிஜாம்பாஷா (60) திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் தூக்கத்தில் விபத்தை ஏற்படுத்தியாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. விசாரணை நடத்தி வருகின்றனர்.