முதியவரை கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை :

முதியவரை கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை :
Updated on
1 min read

திருக்கோவிலூரை அடுத்த பழங்குர் குப்பத்துமேடு கிராமத்தில் நிலப்பகுதியில் தனி வீட்டில் செல்வநாதன் (87) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்கியம்மாள், மும்பையில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை செல்வநாதன் வசிக்கும் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள், அவரைக்கட்டிப்போட்டுள்ளனர். பீரோவை திறந்து ரூ.1 லட்சம் ரொக்கம், 14 பவுன் நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளனர். அப்போது கைச்செலவுக்கு கூட பணமில்லாமல் எடுத்துச் செல்கிறீர்களே என செல்வநாதன் கேட்டபோது, ரூ.1,000 மட்டும் கொடுத்தனர். அங்கு கண்காணிப்பு கேமரா இருப்பதை அறிந்து, அதன் வயர்களை அறுத்து விட்டுச் சென்றுள்ளனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in