கடம்பத்தூரில் மக்கள் : சாலை மறியல் :

கடம்பத்தூரில் மக்கள் : சாலை மறியல் :
Updated on
1 min read

திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர், வைஷாலி நகரில்சமீபத்தில் பெய்த கனமழையால் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் 20 நாட்களாக பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை.

இந்நிலையில், நேற்று காலை 100-க்கும் மேற்பட்டோர் கடம்பத்தூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார், கடம்பத்தூர் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் மக்களை சமாதானப்படுத்தி, மழைநீர் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in