ஒரேநாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு :

ஒரேநாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நமச்சிவாயபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (53). இவர், 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தததையடுத்து விளாத்தி குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கடந்த 31.10.2021 அன்று இவரை கைது செய்தனர்.

ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலியைச் சேர்ந்த மாரிச்செல்வம் மகன் மதன் (22). பழையகாயல் ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த சேர்மபாண்டி மகன் முத்துப்பாண்டி (20). இவர்கள் இருவரையும் கடந்த 10.11.2021 அன்று ஆத்தூர் கீரனூர்சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஆத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி ஜெயக்குமார் அளித்த பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் சுப்பிரமணியன், மதன், முத்துப்பாண்டி ஆகிய மூவரும் குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in