Published : 09 Dec 2021 03:10 AM
Last Updated : 09 Dec 2021 03:10 AM

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட - பேருந்து நிலையம் திறப்பு :

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம் நேற்று திறக்கப்பட்டது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், திருவையாறு வழித்தடப் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2019 -ம் ஆண்டில் இடிக்கப்பட்டு, ரூ.29.93 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டது.

இந்த பேருந்து நிலையத்தில் 39 பேருந்து நிறுத்தங்கள், 93 கடை கள், 4 பொதுக் கழிப்பறைகள், தலா ஒரு கண்காணிப்பு அறை, காவலர் அறை, 5 பயணிகள் காத் திருப்போர் அறை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருவையாறு வழித்தடப் பேருந்து நிலையத்தில் 434 இருசக் கர வாகனங்கள், 61 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகை யிலான வாகன நிறுத்துமிடம், 31 கடைகள், 8 உணவகங்கள் கொண்ட வணிக வளாகம் ஆகி யவை கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தப் பேருந்து நிலையத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை யிலிருந்து காணொலிக்காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இதையொட்டி, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர், பேருந் துகளின் இயக்கத்தை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கிவைத் தார்.

இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திர சேகரன், சாக்கோட்டை க.அன்ப ழகன், டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா, மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஜெயங்கொண்டத்தில்...

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் நகராட்சி சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் விரிவுப்ப டுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இதையடுத்து ஜெயங்கொண் டம் பேருந்து நிலையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் அமைச் சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி, எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித் தனர். உடையார்பாளையம் கோட் டாட்சியர் அமர்நாத், ஜெயங் கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி, வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x