

தூத்துக்குடி விகாசா பள்ளியின் வெள்ளிவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து, இலவச கண் சிகிச்சை முகாம், சாயர்புரம் விகாசா பன்னாட்டு பள்ளியில் நடைபெற்றது.
முகாமை, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் டி.வேல்சங்கர், பள்ளி முதல்வர் என்.கே.சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 320 நோயாளிகள் பங்கேற்றனர். 190 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. 16 பேர் இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.