கோவையில் இன்று 10 மையங்களில் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு :

கோவையில் இன்று 10 மையங்களில் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு  :
Updated on
1 min read

கோவை: கோவை மாவட்டத்தில் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு 10 மையங்களில் இன்று தொடங்குகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும், கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்து பேசும்போது, ‘‘ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேர்வு 8-ம் தேதி (இன்று) முதல் வரும் 12-ம் தேதி வரை நடக்க உள்ளது. மாவட்டத்தில் ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி, இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கதிர் கலை அறிவியல் கல்லூரி, கதிர் தொழில்நுட்பக் கல்லூரி, நேரு கலை அறிவியல் கல்லூரி, நேரு இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 10 மையங்களில் இத்தேர்வு நடக்கவுள்ளது. 8,055 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் சென்று வரும் வகையில் போதியளவில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில், கரோனா தொற்று தொடர்பான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டும்,’’ என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in