Published : 08 Dec 2021 04:09 AM
Last Updated : 08 Dec 2021 04:09 AM

நாமக்கல்லில் 75.35 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் : 11-ம் தேதி 14-வது கட்டமாக சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 75.35 சதவீதம் பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 43.83 சதவீதம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 13,84,300 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி இதுவரை முதல் தவணை தடுப்பூசி 10 லட்சத்து 43 ஆயிரத்து 103 நபர்களுக்கும் (75.35 சதவீதம்), இரண்டாம் தவணை தடுப்பூசி 6 லட்சத்து 6 ஆயிரத்து 787 நபர்களுக்கும் (43.83 சதவீதம்) செலுத்தப்பட்டுள்ளது.

இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 8,612 நபர்களுக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 1,440 நபர்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 10 ஆயிரத்து 216 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1,462 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 13 கட்ட தடுப்பூசி முகாம் மூலம் 5 லட்சத்து 13 ஆயிரத்து 473 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வரும் 11-ம் தேதி 14-ம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் 513 இடங்களில் நடைபெற உள்ளது. முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் 82 சதவீதம் பேர்

கரோனா தொற்றை தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் 13 கட்டமாக சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்த தகுதியான நபர்களாக 18 லட்சத்து 97 ஆயிரத்து 312 பேர் உள்ளனர். தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்த தகவல் வெளியானதும், தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதில், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 18 வயதைக் கடந்த 3 லட்சத்து 87ஆயிரத்து 503 பேர் உள்ளனர். இதில், 3 லட்சத்து 20ஆயிரத்து 522 பேர் (82 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசியும், இரண்டாம் தவணை தடுப்பூசியினை 2 லட்சத்து 7ஆயிரத்து 971பேருக்கும் (53.67சதவீதம்) போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x